Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடிக்க தண்ணி தர மாட்டீங்களா?”…. மனிதாபிமானம் இல்லையா?…. கர்நாடகாவை வெளுத்து வாங்கிய அமைச்சர்….!!!!

நேற்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் “ரூ. 4,600 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனை கண்டு வெகுண்டெழுந்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

ஆனால் இது எந்தவிதமான மனிதாபிமானம் ? குடிப்பதற்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது நியாயம் தானா ? சட்டபூர்வமான அடிப்படையிலும் சரி, மனிதாபிமான அடிப்படையிலும் சரி ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை தொடங்குவதற்கான உரிமை தமிழ்நாட்டிற்கு உள்ளது” என்று அமைச்சர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |