கணவர் ஒருவர் சாப்பிடும் போது தண்ணீர் கொண்டு வர தாமதமாக்கிய மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் தங்கவேல்(77) – காளியம்மாள்(60). தங்கவேல் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல சம்பவத்தன்று தங்கவேல் சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாடு நன்றாகவே இல்லை என்று கூறியுள்ளார். மேலும் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவருடைய மனைவி காளியம்மாள் தண்ணீர் கொண்டுவர கொஞ்சம் தாமதம் ஆனதால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேல் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் சுவற்றில் மோதி காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தங்கவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.