ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் திலேஷ்வர் கஞ்சு வசித்து வருகிறார். இவருக்குக் கடந்த வருடம் பிரியா தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து பிரியா தேவி 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இதனிடையில் மதுவுக்கு அடிமையான திலேஷ்வர் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி பிரியா தேவியிடம் சண்டைபோட்டு வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ள பொருட்களை விற்று திலேஷ்வர் மது குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மதுகுடிக்க மனைவியிடம், திலேஷ்வர் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த திலேஷ்வர், மனைவியின் கழுத்தை பிடித்து இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியா தேவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திலேஷ்வரை கைது செய்தனர்.