புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடசேரிபட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் எடுத்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்க பொக்லைன் எந்திரங்கள் மற்றும் கட்டிட பொருள்களுடன் கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அடுக்கு மாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் . அப்போது பொது மக்கள் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் கட்ட அனுமதிப்போம் ஆனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பொது மக்களிடம் பேசி அவங்களிடம் அனுமதி வாங்கும் வரை தற்காலியமாக பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.