வாணியம்பாடியில் வாகனம் ஓட்டிகளுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், வாணியம்பாடி – ஆலங்காயம் செல்லும் ரோட்டில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.
அதில் தேவையற்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்றும், மது அருந்திக்கொண்டு வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசியுள்ளார் இதைத்தொடர்ந்து ரோட்டில் செல்லும்போது பாதுகாப்பாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும், அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.