குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வருவதால் தற்போது பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதேபோல் யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் தற்போது எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தாத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மராத்திய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் தேசாலே. சம்பவத்தன்று இந்த ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது ஆசிரியரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்து உள்ளன.
மேலும் அவர் ஆபாசமான வார்த்தைகளால் மாணவர்களை திட்டியுள்ளார். இதனை ஒரு மாணவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே, அது பெரும் வைரலானது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறையின் காதுக்கு எட்டவே அதிகாரி ஷோ காஸ் ஆசிரியரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.