ராஜஸ்தானை சேர்ந்த சுனில் என்ற 27 வயது இளைஞருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில் மணமகளின் கிராமத்திற்குச் சென்று உள்ளனர். அப்போது மணமகனை வரவேற்பதற்கு இசை வாத்தியங்களுடன் DJ இசையும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மணமகனும் அவரது நண்பர்களும் மது அருந்தும் இருந்ததால் வரவேற்பு ஊர்வலத்தை தொடங்க விடாமல் தொடர்ந்து உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அதனால் திருமணம் குறித்த நேரத்திற்கு இவர்களால் வந்து சேர முடியவில்லை.
அதனால் மணமகளின் குடும்பத்தினர் கடுப்பாகினர். அதுமட்டுமல்லாமல் மணமகளும் குடித்துவிட்டு நடனம் ஆடியதால் மணமகளை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக குறித்த நேரத்தில் தனது மகளுக்கு வேறு ஒருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதை அறிந்த மணமகன் குடும்பத்தினர் ஆத்திரத்தில் தகராறு செய்தனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பிறகு இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.