Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடித்துவிட்டு வந்த கணவர்…. மனைவி மற்றும் மகனுக்கு நேர்ந்த கொடுமை…. விருதுநகரில் பரபரப்பு….!!

மனைவி மற்றும் மகனின் கழுத்தை அறுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பால்பாண்டி- கண்ணகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டி மது குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். அதே போல் நேற்றும பால்பாண்டிக்கும் அவரது மனைவி கண்ணகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த பால்பாண்டி அருகிலிருந்த பிளேடால் மனைவி மற்றும் மகளின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கண்ணகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |