Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குடிநீரில் கலக்கும் கழிவுகள்…. ரூ.5 லட்சம் மதிப்புள்ள நூல்கள் அழிப்பு…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகளுக்கு சென்று ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நூல்களை அழித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசின் அனுமதியின்றி பல்வேறு சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து விசைத்தறி மூலம் நெய்யப்பட்ட துணிகளை குமாரபாளையத்திற்கு நேரடியாக கொண்டு வந்து சாயம் ஏற்றுகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் இரவோடு இரவாக சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுகள் சாக்கடைகளில் வெளியேற்றி விடுகின்றனர்.

இதனால் சாயகழிவுகள் காவிரி ஆற்றில் கலந்து நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு குமாரபாளையத்தில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் நீல நிறத்தில் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் திருவள்ளூர் நகர் பகுதியில் சாயக் கழிவுகள் குடிநீரில் கலப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி செயல்பட்ட 5 சாயப்பட்டறைகளை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சாயப்பட்டறைகளுக்கு சென்ற அதிகாரிகள் சாயம் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள் மீது ரசாயன மருந்துகளை ஊற்றி அழித்துள்ளனர். மேலும் அனுமதி பெறாமல் சாயப்பட்டறைகளை வைத்திருந்த உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |