திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு வி.எம்.எஸ் காலனி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதுபற்றி சின்னாளப்பட்டி பேரூராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது, குடிநீர் கலங்களாக வருவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருக்கும் தண்ணீரை காலி செய்து தொட்டியை சுத்தப்படுத்திவிட்டோம். ஆனாலும் தண்ணீர் கலங்கலாக வருவதால் குழாயில் உடைப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என கூறியுள்ளனர்.