Categories
மாநில செய்திகள்

குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது…. விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாப பலி…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!!

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியை தூய்மை செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அருகில் திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டில் 10 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளார். இந்நிலையில் விஷ வாயு தாக்கி அவர் மயங்கி விழுந்திருக்கிறார்.

இதன் காரணமாக அவரது மகன் பிரவீன்குமார் மற்றும் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் போன்றோரும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினர். இவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |