அம்மாபேட்டை அருகில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பிற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ரூபாய் 2,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஆனால் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை.
இதனால் குடிநீர் இணைப்பு பெற்ற அந்த வீடுகளில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக டெபாசிட் தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இருப்பினும் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதனால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் நேற்று வேலைக்கு வந்த போது அட்டை கொடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் சித்தார் to பூனாச்சி சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுவிட்டு ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்கள்.