தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் இணைப்பை வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஊராட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை மூவாயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மேலும் தீவிர படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து தமிழக குடிநீர் வழங்கல் வாரியம் மேற்கொண்டு வருகிறது.அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் பணிகளை தொடங்குவதற்கு முன்பு அனுமதி ஏற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஊராட்சி தலைவர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.