Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குடிநீர் எந்திரங்கள்…. நீதிபதிகள் ஆய்வு….. அதிகாரிகளுக்கு உத்தரவு….!!

வனப்பகுதிகளில்  நீதிபதிகள் ஆய்வு செய்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளங்களுக்கு ஏற்ற இடமாகவும், வனப்பகுதிகள் நிறைந்தும் காணப்படுகிறது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் கூடும் முக்கிய இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான சதீஷ்குமார், சுப்பிரமணியன், இளந்திரையன், பொங்கியப்பன் தண்டபாணி, பாரதிதாசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இவர்கள் ஏடிஎம்களில் தண்ணீர் சரியாக வருகிறதா என்றும், தண்ணீரை குடித்து பார்த்து தரத்தையும் ஆய்வு செய்தனர். இந்த எந்திரங்களை முறையாக பராமரிக்க வேண்டுமென நகராட்சி ஆணையாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதன்பிறகு மசினகுடி வனப்பகுதி, முதுமலை புலிகள் காப்பகம், மாவனல்லா பகுதியில் இருக்கும் லண்டனா களைச்செடிகள் அகற்றப்பட்ட பகுதிகள், அப்பர் கார்குடியில் களைச்செடிகள் அகற்றப்பட்ட இடம், கிளன்மார்கனில் களைச்செடிகள் அகற்றப்பட்ட இடம், யானைகள் முகாம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருக்கும் வென்லாக் டவுன் பகுதியில் மரக்கன்றுகளை நீதிபதிகள் நட்டனர். இந்தச் செடிகளுக்கு நீதிபதிகள் தண்ணீர் ஊற்றி செடிகளை நன்றாக பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, மாவட்ட ஆட்சியர் அமிரித் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடனிருந்தனர்.

Categories

Tech |