குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுதுபார்க்கும் வேலைகளை விரைவில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருக்கின்றார்.
மனுதாரர் தரப்பில் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தானியங்கு குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிபதி விசாரித்த போது மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது, முப்பத்திமூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து விடுவதாக கூறினார். இதனை தொடர்ந்து நீதிபதி, ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து, குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வழங்கும் இடங்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என நீதிபதி கூறியதோடு அன்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.