Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும்” சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. திருப்பூரில் பரபரப்பு….!!

குடிநீர் வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் பொதுமக்கள் கூறியதாவது, கடந்த 6 வருடங்களுக்கு முன்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு 3 மடங்கு பணத்தை முறைகேடாக பெற்றுக் கொண்டு தற்போது வரை இணைப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் மீண்டும் பணம் செலுத்த கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தால் இப்பகுதியின் ஆர்.ஒ. வாட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |