பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேனி மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி முன்பு தமிழ் மாநில தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேனி மருத்துவமனையில் முறையாக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாநில தலைவர் முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தலைவர் சங்கிலி, மாவட்ட பொதுசெயலாளர் குமரேசன், மாநில அமைப்பு செயலாளர் ஆனந்த், ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.