லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் முக்கிய அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேனி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேகானந்தனின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த அனைத்து சொத்து ஆவணங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு வீட்டில் இருந்த பணத்திற்கு விவேகானந்தன் குடும்பத்தினர் சரியான ஆவணத்தை காண்பித்ததால் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றவில்லை. இந்த சோதனை காலை 7 மணி முதல் மாலை 6.40 மணி வரை நடை பெற்றுள்ளது. மேலும் திடீரென குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.