Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்க புதிய செயலி… ஆர்டர் பண்ணா வீட்டுக்கே வரும்… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் புதிய செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர் இல்லாமல் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. சில பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சிலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்களின் சிரமத்தை போக்க மாணவர்கள் புதிதாக ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

அதன்படி சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் “டேங்க்மீ”என்ற செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். வாடிக்கையாளர்களும், தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்களும் இணைந்து இந்த சேவையை தற்போது மயிலாப்பூர் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பகுதிகளில் வழங்கி வருகின்றனர். இந்த செயலி மூலம் தண்ணீர் முன்பதிவு செய்ய, தண்ணீர் தேங்காய் அளவுக்கு ஏற்ப சரியான விலை குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் குறித்த நேரத்தில் டெலிவரி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |