குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சிவகாசி -செங்கமலநாச்சியார்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தது தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.