Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வாரமா இதான் நடக்குது… குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்…. சாலையில் இறங்கி போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் ஒரு வாரமாக தண்ணீர் விநியோகம் சரியாக செய்யப்படாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள கட்டிகாரனூர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் ஒழுங்காக விநியோகிக்க படவில்லை. இதனால் மக்கள் தண்ணீரின்றி மிகவும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொது மக்கள்  கட்டிகாரனூர் சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |