திருச்சியில் குடிபோதையில் இருந்த இளைஞர் அரசு பேருந்தை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் குடி போதைக்கு அடிமையானவர். அவர் நேற்று குடிபோதையில் இருந்த போது திருச்சி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளார். அதனைக் கண்ட போலீசார் மற்றும் பேருந்து ஊழியர்கள் அவரை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றனர்.
அதன்பிறகு அவரை பிடித்து பேருந்தை கைப்பற்றினர். இதனையடுத்து பேருந்தை கடத்திச் சென்ற இளைஞரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.