Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த நபர்…. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவிகள் பள்ளிகளில் வைத்தோ, வெளியிடங்களில் வைத்தோ அல்லது வீட்டிற்கு வெளியே விளையாடும் போதோ சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பகுதியில் சோலையப்பன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சோலையப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |