ஒரு கார் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியினுடைய புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து குடும்பத்தார் உருக்கமாக பேசியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள லண்டன் நகரில் Nihal Toor என்ற 8 வயது சிறுமி தனது தாய், பாட்டி மற்றும் உறவினர்களுடன் காரில் சில நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் வேகமாக nihal Toor வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் சிறுமி nihal படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அதன்பின் அவர் சிறுது நேரத்தில் உயிரிழந்துவிட்டார். அவருடன் வந்த மற்ற மூவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இவர்கள் கார் மீது மோதிய காரை ஓட்டிய 33 வயதுள்ள Alicia van Bree என்ற பெண் குடிபோதையில் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார்.
அதன்பின் விடுவிக்கப்பட்ட Alicia செப்டம்பர் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் உயிரிழந்த சிறுமியின் இறுதிச்சடங்கு சமீபத்தில் நடைபெற்றது. Nihal Toor குறித்து பேசிய குடும்பத்தினர், “அவள் மிகவும் புத்திசாலித்தனமான குணம் கொண்டவள், நடனம் ஆடுவது, பாடுவது கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் மிகவும் ஆர்வம் காட்டுவாள். இவளுக்கு மூன்று மூத்த சகோதரிகள் உள்ளனர் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். அவர் மரணம் எங்கள் குடும்பத்தாரை பெறும் வேதனையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.