Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் சுற்றும் நேபாளிகள்….!! தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முயற்சி…!!

இந்திய-நேபாள எல்லையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் குடிபோதையில் சிலர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய-நேபாள எல்லையில் இருக்கின்ற சம்பாவத் மாவட்டத்தில் தனஞ்பூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் பில்லர் எண் 811 என்ற நிலம் எவருக்கு சொந்தமானது என்பதில் இரு நாடுகளுக்கும் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்தப் பகுதி அடைக்கப்பட்டு உள்ளே எவரும் நுழையக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நேபாளத்தை சேர்ந்த சிலர் குடிபோதையில் இருந்த நிலையில் அந்தப் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதனை பார்த்த பாதுகாப்பு காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

நேபாள எல்லையில் மூன்று தினங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீது நேபாள காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இந்திய நேபாள எல்லையில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் நிலையில், சாஸ்த்ரா சீமா பால், ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் பிரிவு காவலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |