தம்பி அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(29), அருண்குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் விக்னேஷ் ஓட்டுனராகவும், அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2020-ஆம் ஆண்டு குடும்ப தகராறில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து தங்களது தாயை கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கு சூரம்பட்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அண்ணன் தம்பி இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது வீட்டு வாடகை கொடுப்பது தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அருண்குமார் தனது அண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த விக்னேஷ் மயங்கி விழுந்ததும், போதையில் அருண்குமார் தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது அண்ணன் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த அருண்குமார் அங்கிருந்து தம்பி ஓடினார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் b இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அருண் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.