குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே உள்ள அன்னம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் விநாயகம். இவரின் மகன் ஹரி பிரகாஷ். மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் அவ்வப்போது மது அருந்திவிட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில் ஹரிபிரகாஷ் குடிபோதையில் வீட்டில் இருந்த பொழுது விநாயகத்துக்கும் ஹரிபிரகாஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது விநாயகம் கோபமடைந்து ஹரி பிரகாஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ஹரி பிரகாஷ் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விநாயகம் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி வருகின்றார்கள்.