Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் தகராறு…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோனேரிப்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் கூலித்தொழிலாளியான ராஜி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெருமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்த்திக்(38) என்ற மகன் உள்ளார். இவர் கோழி வண்டி லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் தந்தை மகனுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜி வீட்டுக்கு வரும் மின் வயரை அறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அக்கம் பக்கத்தினர் தந்தை மகன் இருவரையும் சமாதானப்படுத்தினர். இரவு 11 மணிக்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் கார்த்திக் தனது தந்தையை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்டுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |