Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் தாய் செய்த கொடூரம்… 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை…!!!

தெலுங்கானா மாநிலத்தில் குடிபோதையில் தாயே தனது இரண்டு வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியில் பரமேஸ்வரி(22) என்ற பெண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். தன் மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கண்டித்த பரமேஸ்வரி கள் குடித்து வந்துள்ளார். அதனால் மாமனார் மற்றும் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி தனது இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அவர் குடித்துவிட்டு குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை பொறுப்பில்லாமல் சுற்றுகிறார் என்று மாமனார் கண்டித்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. பரமேஸ்வரியின் கணவர் இந்த சம்பவம் நடந்த போது வீட்டில் இல்லை. மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரியை கைது செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Categories

Tech |