சேலம் மாவட்டத்தில் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய ஆணுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை வழங்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மீது வழக்கு ஒன்று சேலம் கோர்ட்டில் நடந்துள்ளது. அந்த வழக்கில் மணியின் மனைவி பேபி செல்வராஜ்க்கு எதிராக சாட்சி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் கடந்த 2009 ஆம் ஆண்டு குடித்து விட்டு பேபியின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேபியை திட்டியுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்வராஜ்யை தட்டிக் கேட்டுள்ளார்கள். அப்போது செல்வராஜ் தட்டிக் கேட்டவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண்னை தகாத வார்த்தையால் திட்டிய செல்வராஜ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை மேலும் 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.