குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்தார்கள்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் தாலுகா உட்பட்ட குமரலிங்கம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் மனைவி கற்பகம். கிருஷ்ணன் கிளி ஜோதிடம் பார்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜோதிடம் பார்த்துவிட்டு வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்பொழுது தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டார்.
பின் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்து கத்தி எடுத்து கற்பகத்தை சரமாரியாக குத்தியுள்ளார் கிருஷ்ணன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். பின் கிருஷ்ணனை கைது செய்தார்கள்.