திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஏராளமானவர்கள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பள்ளி மாணவர்கள் இரவில் மது குடித்துவிட்டு மைதானத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். மேலும் திடீரென பள்ளி மாணவர்கள் ரகளை செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேசி உள்ளனர். இதனையடுத்து பெற்றோரை வரவழைத்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.