சென்னையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதை தட்டிக்கேட்ட இளைஞர்களை ஆபாச வார்த்தைகளால் பெண் ஒருவர் திட்டிய
வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சித்திர பாலா. இவர் ஒரு நிகழ்ச்சி முடிந்து அவரது காரில் திருபுரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் விக்னேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தின்
மீது மோதி நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் மூன்று கிலோமீட்டர் துரத்தி சென்று காரை பிடித்தனர். அப்போது காரிலிருந்து இறங்கிய சித்திர பாலா மற்றும் அவரது தோழி நான்சி காரை மடக்கிய இளைஞர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது தான் அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக போதையில் இருந்து இரு பெண்களை மருத்துவ பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோதனையில் சித்திர பாலா, நான்சி போதையில் இருந்தது தெரியவந்தது. ஆனால் மருத்துவர்கள் இரு பெண்களும் குடிக்கவில்லை என்று கூறி சான்று அளித்ததால் இளைஞர்கள் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.