Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ரகளை…. வேல் சிலையை உடைத்த வாலிபர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

குடிபோதையில் வாலிபர் வேல் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் 2 இடங்களில் வேல் மற்றும் மயில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளுக்கு பக்தர்கள் தினமும் மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் அரை நிர்வாணத்தில் வந்த வாலிபர் ஒருவர் ரவுண்டானாவில் ஏறி வேல் சிலைக்கு மேல் நின்றுள்ளார். இதனால் வேல் சிலை 2 துண்டாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சேலத்தைச் சேர்ந்த முருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு போதையில் வேல் சிலையை சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |