மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது கோபமடைந்த செல்வராஜ் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மஞ்சு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.