Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய லாரி ஓட்டுநர் – 10 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு…!!

பல்லடம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தால் சோகம் நிகழ்ந்திருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாயக்கம்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து இன்று காலை லாரி ஒன்று பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி இரண்டு கார்கள் வந்து கொண்டிருந்தது. இதில் முதலில் ஒரு கார் மீது மோதிய லாரி, அடுத்து இன்னொரு கார் மீதும் மோதியது. இதில் இரண்டாவதாக  மோதிய கார் லாரியின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதையடுத்து இந்த கோர விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காமநாயக்கபாளையம் காவல் நிலையத்துக்கும், பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரைனின் உதவியை கொண்டு லாரியின் அடியில் சிக்கிருந்த காரை மீட்டனர். இதில் காரில் வந்த கார்த்திகேயன் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது 10 வயது மகள் தனிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தனிகாவின் உடலையும், சரண்யாவின் உடலையும் மீட்ட தீயணைப்பு துறையினர் காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயன் உடலை மீட்க மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து கிரேனின் உதவியுடன் லாரியின் அடியில் சிக்கி இருந்த காரை மீட்ட தீயணைப்பு துறையினர் கார்த்தியின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முதல் காரின் மீது மோதியதில் அந்த காரில் வந்த 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி  சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த கதிரவன் என்ற ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. லாரி டிரைவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து அடுத்தடுத்து இரண்டு கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |