14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த காவல்துறை உத்தரவிட்டிருக்கிறது. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நீதிமன்ற வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் காவல்துறையினிடம் பிடிபடுபவர்கள் அபராத ரசீது மட்டும் பெற்று சென்று விட்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருவதாக புகார் அளித்துள்ளது. இதனை அடுத்து அபராத தொகையை செலுத்தாமல் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.