இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி தன்னுடைய பள்ளிப் பருவங்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். துரதிஷ்டவசமாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காத வினோத் காம்ப்ளி பேசும்படியான அளவிற்கு கிரிக்கெட்டில் பெயர் வாங்கவில்லை.
இந்நிலையில் இவர் தற்போது குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் தன்னுடைய காரை இயக்கிய தாகவும், இதனால் மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வினோத் காம்ப்ளியை போலீசார் கைது செய்துள்ளனர் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.