திருச்சியில் குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் மீரா மொய்தீன். சம்பவத்தன்று இவருடைய ஹோட்டலுக்கு மாரியம்மன் கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்த சுரேஷ், ஜெயபால், குமரேசன் ஆகிய மூன்று பேர் குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீரா மொய்தீனிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தட்டி கேட்டபோது மீரா மொய்தீனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர்கள் ஹோட்டலில் இருந்த பொருட்கள் மற்றும் தோசை கல்லை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து தகராறு செய்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.