Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லை….! கூட்டமாக இடம் பெயர்ந்த யானைகள்… அரசுக்கு திடீர் கோரிக்கை …!!

ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானை கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கோடைகாலம் என்பதால் உணவுக்காகவும்,  தண்ணீருக்காகவும் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். அந்த வகையில் சென்னமாலம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் வன பகுதியின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றன.

அப்போது சாலைகளில் வாகனங்கள் வருகிறதா ? என பார்த்து காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து சென்றன. யானைகள் கூட்டத்தை வழி நடத்தும் பெண் காட்டு யானை முன்னே செல்ல அதனை தொடர்ந்து மற்ற யானைகள் அதன் குட்டிகளுடன் தொடர்ந்து சென்றன. இதனால் வனப்பகுதியில் உள்ள குட்டைகளிலும், தண்ணீர் தொட்டிகளிலும் போதிய அளவு தண்ணீரை வனத்துறையினர் நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |