Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பளுகல் அருகில் தேவி கோடு கானத்து கோடு பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் துளசியிடம் வந்து குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அதன்பிறகு துளசி தண்ணீர் எடுப்பதற்காக திரும்பியுள்ளார். அப்போது வாலிபர் துளசியின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்றுள்ளனர்.

உடனே துளசி திருடன் என்று கூச்சலிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அந்த 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர். இதுகுறித்து துளசி பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |