ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பி.மேட்டூர் பிரிவு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஏ.டி.எம் மையதிற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் அங்கிருந்த பொருட்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்திவிட்டு இங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வங்கி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேமராக்களை உடைப்பதற்கு முன்பு பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கூலித் தொழிலாளியான தமிழரசன் என்பவர் போதிய வருமானம் இல்லாமல் மது குடிப்பதற்காக ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.