போதைக்கு அடிமையான சிலர் போதைக்காக கிருமிநாசினியை குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிராந்தியமான சகாவில் உள்ள டாட்ன்ஸ்கி மாவட்டத்தைச் சேர்ந்த போதைக்கு அடிமையான சிலர், மதுவுக்கு பதில் கிருமிநாசினியை குடித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் கிருமிநாசினி குடித்த, அடுத்த சில மணி நேரத்தில் வாந்தி , மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஏழு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.