குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே தெப்பத்தை இயக்கி வருகின்றார்.
புதுச்சேரி தமிழக ஆற்றின் இடையே தெப்பம் ஒன்றை சாராயக் கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் இயக்கி வருகின்றார். புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழக குடிமகன்கள் அங்கு சென்று மதுவாங்கி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தண்ணீர் இன்னும் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் இருந்து வந்த குடிமகன்கள் புதுச்சேரிக்குச் சென்று குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சாராய கடை உரிமையாளருக்கு விற்பனை பாதிக்கப்பட்டதால் குடிமகன்களின் வசதிக்காக கடையின் உரிமையாளர் சொந்த செலவில் தெப்பம் ஒன்றை இயக்கி வருகின்றார். இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த மகன்களை அழைத்து சென்று சாராயம் குடித்த பிறகு மீண்டும் அங்கேயே அழைத்து வந்து விட்டுவிடுகின்றனர். இதன் விளைவால் தமிழக குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரிக்க குடிமகன்கள் போதையில் நிலைதடுமாறி ஆற்றில் கவிழும் அபாயம் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.