Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு தடுப்பூசி முகாம்…. டாஸ்மாக் பக்கத்திலேயே…. அடடே வானதி செம ஐடியா…!!!

குடிமகன்களுக்கு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பெண்களை விட ஆண்களே அதிகமாக தயக்கம் காட்டி வருகின்றனர். மது பழக்கம் உடையவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே ஆண்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கமாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு பக்கத்திலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார்.

Categories

Tech |