Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசிடம் அனுமதி கோரப்படும் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆகஸ்ட் 15க்கு பின் அரசு இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |