புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபான வகைகளுக்கு 30 ரூபாயும், உயர்ரக மது பானங்களுக்கு 50 ரூபாய் வரையும் உயர் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான விலை உயர்வு பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.