Categories
தேசிய செய்திகள்

குடிமகன்களை குஷிப்படுத்த… ‘மதுபானங்களுக்கு தனி மியூசியம்’…. அதுவும் நம்ம இந்தியாவுல… எங்க இருக்கு தெரியுமா….??

இந்தியாவிலேயே கோவாவில் முதன்முதலாக மதுபான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவாவில் மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.. குடிமகன்களை கவரும் வகையில் உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு  ‘All About Alcohol’  என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை நந்தன் குத்சத்கார் என்ற தொழிலதிபர் அமைத்துள்ளார். இன்று முதல் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவாவில் புகழ்பெற்ற ஃபெனி மதுவுடன் தொடர்புடைய பழங்காலப் பொருள்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஃபெனி என்பது முந்திரியில் இருந்து எடுக்கப்படும் ஒரு பானமாகும். நூற்றாண்டுகளுக்கு முன்பே ஃபெனியை சேமித்து  வைக்க பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பொருட்களும் இதில் இடம்பெற்றுள்ளது.  இதுகுறித்து இந்த அருங்காட்சியகத்தை அமைத்த தொழிலதிபர் நந்தன் கூறியதாவது: “கோவாவில் மதுபானங்களுடன் தொடர்புடைய வரலாற்றைப் பறைசாற்றுவதாக இந்த அருங்காட்சியத்தின் நோக்கம்.  ஸ்காட்லாந்தில், ரஷ்யாவிலும் மதுவை கொண்டாடுகின்றனர். மதுபானங்களை விருந்தோம்பலின் அடையாளமாக பார்க்கின்றனர். ஆனால் இந்தியாவில் மதுபானம் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. இதற்காகவே நான் இந்த மதுபான அருங்காட்சியகத்தை அமைக்க முடிவு செய்தேன்” அவர் தெரிவித்தார்

Categories

Tech |