Categories
உலக செய்திகள்

குடிமக்கள் அனைவருக்கும் 1,400 டாலர்கள்… நிவாரண பணிகள் தொடக்கம்… ஜோபைடன் அறிவிப்பு..!!

அமெரிக்காவின் அனைத்து குடிமக்களுக்கும் தலா 1,400 டாலர்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவிலும் இப்பெருந்தொற்று தீவிரமாக பரவியது. இதனால் அமெரிக்காவில் பொருளாதாரம் வெகுவாக பாதிப்படைந்தது. மேலும் அமெரிக்க மக்கள் பலரும் தங்கள் பணியை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவிடும் திட்டத்தினை கொண்டுவந்துள்ளார். எனவே இதன் கொரோனா நிவாரண மசோதாவானது பல தடைகளுக்குப் பின்பு தற்போது செனட் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதாவது இந்த நிவாரண மசோதாவிற்காக 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு  செலவிடப்படவுள்ளது. இதுதொடர்பாக ஜோபைடன் கூறியுள்ளதாவது, இந்த மசோதாவினால் சுமார் 85% அமெரிக்க குடும்பங்கள் பயனடைவார்கள். மேலும் இத்திட்டத்தின் மூலமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும். மேலும் இம்மாத முடிவுக்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தலா 1,400 டாலர்கள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |