குடிமங்கலம் அருகே வேன் ஆட்டோ மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் சேர்ந்த மாசாணம் என்பவர் ஒட்டன்சத்திரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றுக் கொண்டு கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூருக்கு செல்வதற்காக தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக வேன் ஒன்று 11 பேர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டமடம் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது வேன் மோதியதில் செல்வராஜ், விபின், மல்லிகா, வள்ளியம்மாள், பாலாமணி, குப்புராஜ், கலாமணி, சுப்பிரமணி, மாசாணம் உள்ளிட்ட ஒன்பது பேர் காயமடைந்தார்கள். இவர்களுக்கு தற்பொழுது பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து சரக்கு ஆட்டோ ட்ரைவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் ராஜகுமாரை கைது செய்தார்கள்.